100 யூனிட் இலவச மின்சார திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்-டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணைப்படி 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்.

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும். அதே நேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீங்கள் சுவைத்தது உண்டா???















நள்ளிரவில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் 2.0 படத்தின் சில காட்சிகளை நள்ளிரவில் சென்னை வணிகவளாகத்தில் படமாக்கியுள்ளனர்.

2.0 படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை டெல்லியில் உள்ள மைதானத்தில் எடுத்தனர். ரஜினி, அக்ஷய் குமார் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் நள்ளிரவு 2 மணிக்கு 2.0 படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் நடத்தினார். காலை நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேரும் என்பதால் நள்ளிரவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளார். காலை 6 மணிவரை நீடித்த இந்த படப்பிடிப்பில் அக்ஷய் குமாரும் வேறு சில நடிகர்களும் கலந்து கொண்டனர். ரஜினி கலந்து கொள்ளவில்லை.

‘‘7 கோடி கொடுத்து சீட் வாங்குறாங்க... 15 கோடி சம்பாதிக்கிறாங்க!’’

‘‘7 கோடி கொடுத்து சீட் வாங்குறாங்க... 15 கோடி சம்பாதிக்கிறாங்க!’’

வைகோ காட்டம்
 
 
வைகோ வாகனம் தேர்தலுக்காக மட்டும் கிளம்புவது அல்ல. அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அவரது வாகனம் எப்போதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருப்பதுதான். இதோ இப்போதும் தயார் ஆகிவிட்டார் வைகோ!

ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, சென்னை அண்ணா நகரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைக் கடந்த 16-ம் தேதி காலையில் தொடங்கினார். அவரது வீட்டுக்கு வெளியே தெற்குத் திசையைப் பார்த்து நின்ற பிரசார வேனில் வைகோ ஏற, தொண்டர்களின் முழக்கங்களுடன் வேன் புறப்பட்டது. எம்.ஜி.ஆர் காலனியில் அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடைக்கு அருகே இருந்த முத்துமாரியம்மன் ஆலயம் முன்பாக வேன் நின்றது. வைகோவுக்கு கோயில் அர்ச்சகர் மாலையிட்டு, பூரணக் கும்ப மரியாதை செய்தார். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதை, புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட வைகோ, அங்கிருந்து பிரசார மேடைக்குச் சென்றார். அந்த மேடையில் தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா ஆகிய கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

“தமிழின் முதல் எழுத்து அகரம், அ. எங்களை இயக்குகிற அண்ணாவின் முதல் எழுத்து அ. எங்கள் பிரசாரம் தொடங்க உள்ள அண்ணா நகரின் முதல் எழுத்து அ...” என்று அடுக்குமொழி பாணியில் பேச்சைத் தொடங்கினார் வைகோ. அதன்பின், தனக்கு அளிக்கப்பட்ட கும்பமரியாதை பற்றி விளக்கம் அளித்தார். “நான் பகுத்தறிவாளன். ஆனால், பெரியாரே குன்றக்குடி அடிகளார் விபூதி கொடுத்தபோது, அதை வாங்கிக்கொண்டார். ஆகவே நானும், கோயில் அர்ச்சகர்களின் அன்புக்கு மரியாதை செய்து அதை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

“என் வாழ்நாளில் எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் என் தாய் மாரியம்மாளிடம் ஆசி வாங்கிவிட்டுத்தான் செல்வேன். அன்புத் தலைவர் பிராபகரனை சந்திக்கப் போனபோதும் கூட, என் தாயிடம் ஆசி வாங்கிவிட்டுத்தான் சென்றேன். நான் தேர்தல் களங்களுக்குப்போகும் போதெல்லாம் என் தாய் உயிரோடு இருந்தார். இன்று அவர் உயிரோடு இல்லை. நான் தோற்ற காலங்களில் எல்லாம் அவர் மனதுக்குள் கவலைப்பட்டாலும், எனக்குத் தைரியம் ஊட்டினார். வெற்றிபெறும் காலம் வரும்போது, அதைப் பார்க்க என் தாயார் உயிரோடு இல்லை. முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பு, என் தாய் ஆசி கூறுவதுபோல நினைத்துத்தான் நிற்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

“ஏழு கோடி ரூபாய் செலவு செய்து சீட் வாங்கி ஜெயிக்க ஒருவன் நினைத்தால், அவன் 15 கோடி சம்பாதிக்க ஆசைப்படுகிறான் என்று அர்த்தம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம். படித்த இளைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்குவோம். கல்விக்கடனை அரசே செலுத்தும். சிறு வணிகர்களைப் பாதுகாப்போம். மீனவர்கள் பிரச்னைக்காக மத்திய அரசிடம் வாதாடுவோம். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, கடன்களை ரத்து செய்வோம். தமிழக வாழ்வாதாரங் களைக் காப்போம்” என பட்டியலிட்டார்.

“எங்கள் கூட்டணியில், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எதில் உடன்பட முடியுமோ, அதில் உடன்படுவோம். அதற்காகத்தான் கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலை ஒழிப்பது என்பது கூட்டணியில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த இலக்கு. மதுவை ஒழிப்பது எங்கள் நோக்கம். மதுவிலக்கு பற்றிப் பேச எனக்குத் தகுதி உண்டு. மதுபான ஒழிப்பைப் பற்றிப்பேச ஜெயலலிதாவுக்குத் தகுதி கிடையாது. ‘மதுவை ஒழிப்பேன்’ என்று கலைஞர் சொல்வது மக்களை ஏமாற்றும் வேலை” என்றார்.
 
அதன்பின், ம.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். ஒவ்வொரு வேட்பாளரின் பெயரையும், அவர்களைப் பற்றிய அறிமுகத்தையும் சொன்னார். இறுதியாக, கோவில்பட்டி தொகுதி என்று சொல்லிவிட்டு “கோவில்பட்டியில் பம்பரம் சின்னம் போட்டியிடுகிறது” என்று மட்டும் சொல்லி சஸ்பென்ஸ் வைத்தார். சில நொடிகளில் மீண்டும், “கோவில்பட்டியில் போட்டியிடுபவர் அடியேன் வைகோ” என்று சொல்லி சஸ்பென்ஸை உடைத்தார். தொண்டர்கள் உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். 29 தொகுதிகளின் வேட்பாளர்களையும் மேடைக்கு அழைத்து அனைவரையும் கட்டை விரலை நீட்டி வெற்றிச் சின்னம் காட்டச்சொல்லி குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் 17-ம் தேதி ஒபுளா படித்துறையில் வைகோ பிரசாரம் செய்தார். சமீபகாலமாக அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு பேசிவரும் வைகோ, மதுரை பிரசாரத்திலும் தன் டெம்போவை குறைக்கவில்லை. “ஊழல் செய்து குவித்துவைத்திருக்கும் பணத்தில் 500, 1,000 என்று கொடுத்து வெற்றிபெற்று விடலாம் என்று தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நினைக்கின்றன. இவர்கள் பணம் வழங்குவதைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் ஆந்திராவுக்கு பணம் கடத்தப்பட்டு உள்ளது. அது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அல்ல... ஆட்சிக்கு வர முடியாமல் போனால் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது என்பதால், முன்னதாகவே கொண்டுபோய் பதுக்கிவிட்டனர். இது சம்பந்தமாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விருத்தாசலம் அ.தி.மு.க கூட்டத்தில் வெயிலில் வாடிய 2 பேர் பலியானதற்கு முதல்வர்தான் காரணம். விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. கூட்டணியில் யாரும் தவறு செய்ய முடியாது. அப்படித் தவறு செய்தால் மற்ற தலைவர்கள் தட்டிக் கேட்பார்கள். தாதுமணல், கிரானைட் கொள்ளை போன்ற பல ஊழல்களில் இரு கட்சிகளும் குற்றவாளிகள். இவர்களைப் போன்ற ஊழல்வாதிகளை உலகில் எங்கும் பார்க்க முடியாது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இப்போது மதுவிலக்குப் பற்றி பேசுகிறார்கள். ஆட்சியில் இருந்த காலத்தில் மதுவிலக்குக் கொண்டு வர முயற்சி செய்யாமல், இனிமேல் ஆட்சிக்கு வந்து மதுவிலக்குக் கொண்டு வரப்போவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். நான் மதுவுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியவன். எங்களுக்கு அதைச் சொல்ல உரிமை இருக்கிறது.
 
புதிய வாக்காளர்களையும், இளம் தலைமுறையினரையும் நம்பி தேர்தலைச் சந்திக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக இளம் தலைமுறையினர் எங்களை விரும்புவார்கள். எங்களால்தான் தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஊழலில் மூழ்கியுள்ள தமிழகத்தை மீட்க முடியும். மத ஒற்றுமையைப் பேணிக் காப்பவர்கள் நாங்கள்’’ என்று டென்ஷன் குறையாமல் பேசியவர், “இந்த நாட்டில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க யாருமில்லை. நானும் ஒரு விவசாயி என்பதால், இனி எந்த மேடையில் ஏறினாலும் பச்சைத்துண்டை தலையில் கட்டித்தான் பேசுவேன்’’ என்று கூறியபடி தலையில் பச்சைத் துண்டை கட்டிக்கொண்டார்.

சென்டிமென்ட்டுக்குள் ஏதாவது சீக்ரெட் இருக்கிறதா?

10 கோடியை பதுக்கிவிட்டு, 10 லட்சம் மட்டும் கைப்பற்றுவீர்களா..? குமுறும் எதிர்க்கட்சியினர்

குந்த ஆவணம் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளால்  இதுவரையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ரூ. 84 கோடி.  நேற்று  வருமான வரித்துறையினர் சோதனையில், அரியலூரில்  ரூ.23 லட்சம், திருவாரூரில்   ரூ.17 லட்சம் சிக்கியது. அதே போல் திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் சிக்கியது. இதை பிடித்தது, பறக்கும் படையினர்.



கோட்டையில் இன்று (7.5.2016) நடந்த  பிரஸ் மீட்டில் பேசிய தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி,  தேர்தல் ஆணையம் எத்தனை விழிப்புடனும், வேகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
 ''வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் பணம் நடமாட்டம் அதிகமுள்ளதாக கருதப்படும் 94 தொகுதிகளில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்றோர்கள்தான் இங்கு போட்டியிடுகின்றனர்.
சர்ச்சைக்குரிய இந்த 94 தொகுதிகளிலும் பறக்கும் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகளில்  துணை ராணுவ வீரர் ஒருவர் உடன் இருப்பார்.
செல்போன்களுக்கு ‘ஸ்கிராட்ச் கார்டு’ மூலமாகவும், இ.சி.எஸ். மூலமாகவும்  டாப்-அப் செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலமும் செல்களுக்கு டாப்-அப் செய்யப்படுகிறது. எந்த இடத்தில் அதிகபட்சமாக  ஆன்லைனில்  டாப்-அப் செய்கிறார்கள் என்று கண்காணித்து வருகிறோம். 
கடந்த 3 மாதங்களில் 50 லட்சம் பேர் வரை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் டாப்-அப் செய்துள்ளனர். அவர்களின் விவரங்களை செல்போன் நிறுவனங்களிடம் கேட்டுப் பெற்றுள்ளோம். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.''  என்றார் ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானியின் இத்தனை நீளமான விளக்கத்தையும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் சுக்கு நூறாக உடைத்துத் தள்ளுகிறது.
'' தேர்தல் ஆணையம் என்கிற பெயரில் வாகனங்களில் சிவில் உடையுடன் டோல்கேட்களில்  அதிகபட்ச சோதனை நடத்துவது ஊர்க்காவல் படையினர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர்தான். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ரோல் இதில் மிகவும் குறைவுதான்.
லோக்கல் போலீஸ், சிவில் டிரஸ்சில் அந்த ஸ்பாட்டில் இருந்தால் குட்டு உடைந்து விடும் என்று கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு அவர்களுக்கு போனிலேயே டைரக்‌ஷன் கொடுக்கிறார்கள்.
ஆளுங்கட்சி வாகனங்களாக இருந்தால் தூரத்தில் வரும்போதே போனில் கூப்பிட்டு அந்த வண்டியை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். இதுதான்  ரெய்டு என்கிற பெயரில் அன்றாடம் நடக்கிற கதை.
இதுகுறித்து பல புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து விட்டோம். ஆனால்,  ஆணையத்தின் நடவடிக்கை என்ன என்பதுதான்  தெரியவில்லை.



இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிகமாக கோடிகளில் பிடித்தது வருமான வரித்துறையினர்தான். தேர்தல் ஆணையத்தின்  நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படையினரிடம் சிக்கியது லட்சங்களில் தான்.  இதை வைத்தே  நடந்து கொண்டிருக்கும் ஒருதலைபட்ச செயல்பாடுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து விட முடியும்.
இன்னும் சொல்வதென்றால், இவர்கள் ரெய்டுக்குப் போய் 10 லட்ச ரூபாயை பிடிக்கிற அதே வேளையில் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்து 10 கோடியை இன்னொரு இடத்துக்கு நகர்த்த வழி செய்து கொடுக்கிறார்கள். இந்த ரெய்டுகளே 10 லட்சத்தைக் கொடுத்து பத்து கோடியை இடம் மாற்றுகிற ரெய்டுதான். இதை நாங்கள் போய் எடுத்துச்  சொன்னால் எங்கே கேட்கிறார்கள் ? '' என்று ஆவேசப்படுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்னமும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை  பெறாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

தனுஷிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!






சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பேட்டி. பேட்டியாளர் கேட்கிறார்,

“உங்கள் தகுதிக்கு மீறி அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா...?”

அதற்கு அந்த நடிகர், “இல்லை. கிடைக்கும் அனைத்து அங்கீகாரங்களுக்கும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள என் வேலையில் என்னை முழுமையாக அர்ப்பணித்து கடுமையாக உழைக்கிறேன்.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டியளிக்கிறார்.

பிறகொரு பேட்டியில், “உங்களுக்கு இந்தி தெரியாது, அவர்கள் கலாசாரமும் புரியாது. கொஞ்சம் சறுக்கினாலும் சிராய்ப்புகள் அதிகமாகும். ஏனெனில் ’ராஞ்சனா’ படத்தில் இந்தியின் முன்னணி நடிகையும் நடித்திருந்தார்... உங்களுக்குப் பயமாக இல்லையா...? எப்படி நடிக்கச் சம்மதித்தீர்கள்...?”

புன்னகையை படரவிட்டப்படி, “நான் எனது துவக்க காலத்தில் இங்கேயே பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அவமானங்கள் எனக்கு எப்போதும் புதிதல்ல. ஆனால், அந்த அவமானங்கள் தான் என்னை பட்டை தீட்டியது. என்னை செழுமைப்படுத்தியது... நான் ஹிந்திக்கு அஞ்சி இயற்கையாக வந்த ஒரு வாய்ப்பை மறுக்கிறேன் என்றால், என்னை நானே தாழ்த்தி கொள்கிறேன் என்று அர்த்தம். பிறர் நம்மை அவமானப்படுத்துவதைவிட, நம்மை நாம் அவமானப்படுத்தி கொள்வது தான், நம் ஆன்மாவிற்கு செய்யும் அசிங்கம். அதை நான் செய்ய விரும்பவில்லை”

ஆம். உண்மையில் இது நடிகர்களின் கிளிஷேதனமான பதில் இல்லை. அவர் நடிக்க துவங்கிய காலத்திலிருந்து அவரைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். அவர் எத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறார் என்று. ஒரு காலத்தில், அவர் உருவம் எள்ளி நகையாடப் பட்டது.
தனுஷ் நடித்த முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’ கிளாமராலும், அதிர்ஷ்டத்தாலும் தான் தப்பிடுச்சு.முதல் படத்தோடு காணாமல் போயிடுவார் என்று திரை உலகம் கிசுகிசுக்கவெல்லாம் இல்லை.. நன்றாக உரக்கவே பேசியது. ஆனால், அவர் எந்த அவமானங்களுக்கும் அஞ்சவில்லை. அப்போது அவருக்கு வயது 20, அந்த வயதிலேயே மிகவும் முதிர்ச்சியாக எதையும் மனதில் ஏற்றி கொள்ளாமல் கடுமையாக உழைத்தார். அவரது இரண்டாம் படம் ‘காதல் கொண்டேன்’ மெகா ஹிட். இப்போது விமர்சகர்கள், ஊடகங்கள் அவரை எள்ளி நகையாடிய திரை உலகத்தினர், அவரை, அவரது நடிப்பை பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இனி அவரை தவிர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள துவங்குகின்றனர்.

ஆனாலும், அவரது உடல்வாகு சார்ந்த எள்ளல்கள் தொடர்ந்த வண்ணமே தான் இருந்தது. அவர் இந்த எள்ளல்களை எப்போதும் பொருட்படுத்தவில்லை. தன் இலக்கு என்ன...? அதற்காக எவ்வளவு தன்னை அர்பணிக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சுவாரஸ்ய கதைகளம் இல்லாத படத்தில் கூட மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நடிப்பு மட்டுமல்லாமல் தம் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்றார். பாடல் எழுதி Poettu ஆனார். பாடல் பாடினார். தன் அதீத உழைப்பால் ஐஐஎம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.  அந்த ஒல்லிப்பிச்சான் நடிகரிடமிருந்து நாம் கற்க உண்மையில் ஏராளமான விஷயம் இருக்கிறது. அவர் வாழ்வே நம்மை உற்சாகப்படுத்தும் புத்தகம் தான்.

நாம் நம் துறை சார்ந்து எவ்வளவு அவமானங்களை சந்திக்கிறோம். வாய்ப்பிற்காக எவ்வளவு ஏங்குகிறோம். ஆனால். நம்மை நாம் கோரும் வாய்ப்பிற்காக தகுதிப்படுத்திக் கொள்கிறோமா...? வைரமுத்து ’சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ நூலில் எழுதி இருப்பார், “நம் நாட்டில் ஆசிரியன் என்பவன் கற்றலை நிறுத்தியவனாக இருக்கிறான்...” என்று. அது போல் தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் வரை ஓடும் நாம், வாய்ப்பு கிடைத்தவுடன் நமக்கு நாமே ஒரு பெரிய கதவை மாட்டி ஒரு பெரிய பூட்டை தொங்கவிட்டு கொள்கிறோம். அப்படி இல்லாமல் எப்போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கும் தனுஷின் வெற்றியிலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்கலாம்.

உண்மையில் நீங்கள் விரும்பும் இலட்சியத்தை அடைய விரும்புகிறீர்கள் என்றால் அவர் செய்தது போல் உங்களை நீங்கள் நம்புங்கள். அவமானப் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.

தம்மபதத்தில் கூறி இருப்பது போல், “பிறன் மந்தை ஆடுகளை எண்ணி உங்கள் வழியை மறந்து விடாதீர்கள்”. உங்கள் பாதையை தீர்மானித்து கொள்ளுங்கள் அல்லது நீங்களே உருவாக்குங்கள். அதைத்தான் அவர் செய்தார். அவர் பிறருடன் தன்னை ஒப்பிட்டு தன்னை தானே சிறுமைப்படுத்தி கொள்ளவில்லை. அவர் பாதையில் அவர் பயணிக்கிறார்.

உங்களுக்கு வரும் சறுக்கல்களிலிருந்தும் வாய்ப்பைத் தேர்ந்தெடுங்கள். கொலைவெறி பாடலை அவர் முதலில் இணையத்தில் விடுவதாகவே இல்லை. எடிட் செய்யப்படாத ரா வெர்ஷன் லீக்காகி பரவ தொடங்கியவுடன்தான், இவர்கள் மெருக்கேற்றி வெளியிடுகிறார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட். அது போல் எதிர்பாரா தடங்கள், சிக்கல்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடிக்கடி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர் இன்றும் இந்தி கற்கிறார். எப்போதும் இளையவர்களுடன் நெருக்கமாக இருங்கள். அப்போது தான் டிரெண்ட் தெரியும். உங்களை அதற்கேற்றார் போல் புதுப்பித்து கொள்ள முடியும். தனுஷ் இதையெல்லாம் செய்கிறார். அதனால் தான் அவரால் அவர் மைனஸ்களை, பிளஸ் ஆக்க முடிந்தது.

குறிப்பாக, அவர் அப்பா, அண்ணன் எல்லாம் இயக்குநர்கள் அதனால் அவர் உச்சத்தை தொட்டார் என்று நமக்கு நாமே ஒரு சப்பைக்கட்டை கட்டி ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இந்த திரையுலகிலேயே பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் பிள்ளைகள் தங்களை நிரூபிக்க முடியாமல் இன்னும் தடுமாறுகிறார்கள். உண்மையில் வாய்ப்பு கிடைப்பதைவிட அதை தக்க வைப்பதுதான் அதிக உழைப்பைக் கோருவது. அவர் அதை தக்க வைத்தது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்கும் நகர்ந்து உள்ளார்.
உண்மையில் நாம் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் விரும்புகிறோமென்றால் அவர் சொல்லியது போல் அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹன்சிகா, தமன்னாவோடு நடித்தது எதனால்? சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் பதில்

இரண்டு நாட்களாகவே ஒரு விளம்பரம் இணையத்தையும், தொலைக்காட்சிகளையும், தினமும் காலை செய்தித்தாள்களையும் பரபரக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோரின் மற்றுமொரு கிளை சென்னை அண்ணா நகரில் தொடங்கவிருப்பதற்கான விளம்பரமே அது. அந்த விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னாவை விட நம்மை ஈர்த்த மற்றுமொரு நபர் தான் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் எஸ்.எஸ்.சரவணன்.

அதுமட்டுமின்றி இன்று காலை புதிய கிளையின் தொடக்கவிழாவிற்கு மாதவன், வைரமுத்து, ஜெயம்ரவி மற்றும் ஸ்ரேயா, ஹன்சிகா, தமன்னா வரவிருப்பதாக செய்திகளும் வெளியாக, நிச்சயம் சரவணா உரிமையாளரையும், நட்சத்திர பட்டாளங்களையும் சந்திக்க மக்களோடு மக்களாக அண்ணாநகரில் கலந்தோம்.

காலை எட்டுமணிக்கு அந்த ஏரியா மக்களின் பேச்சில், ஹன்சிகாவும், தமன்னாவும் தான். எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. வெள்ளைநிறத்தில் பிரம்மாண்டமாக ஏழு மாடி கட்டிடங்களுடன் எழுந்துநின்றது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்!

காலை ஒன்பது மணிக்கு, கட்டிடத்தை சுற்றி முழுவதும், ரசிகர்களின் கூட்டம் திரண்டது, ஒரு பக்கம் வரும் சிறப்புவிருந்தினரை வரவேற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் கேரள பாரம்பரிய சண்ட மேளம் முழங்கிக்கொண்டிருந்தது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், சுற்றிலும் கண்கவர் அலங்காரமும் என ரசிகர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

அந்த நேரத்தில், ஜவுளி கடைக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த மேடைக்கு ஒவ்வொரு நட்சத்திரமாக வர, கூட்டம் நெரிசலாக மாறியது. வைரமுத்து, ஹன்சிகா, தமன்னா, மாதவன் மற்றும் ஜெயம்ரவி என்று அனைவருமே அவருக்கான ஸ்டைலில் ரசிகர்களுடன் பேசியது ஹைலைட். ஸ்ரேயா மேடையில் ஒவ்வொரு முறை “ஐ லவ்யூ” என்று சொல்லும்போதும், கூட்டத்தில் மாட்டிக்கொண்ட என்னையும் நெரித்து எடுத்தனர் ரசிக கோடிகள். குறிப்பு: ஸ்ரேயா மூன்று முறை ஐலவ்யூ என்று ரசிகர்களைப் பார்த்து சொன்னார்.

எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை- விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் திமுவுக்கு ஆதரவ தெரிவித்துவருவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதை மறுக்கும் வகையில் விஜய்மக்கள்இயக்கம் சார்பாக அறிக்கை யொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், வருகிற 2016 சட்டமன்றத்தேர்தலில் இளையதளபதிவிஜய் மக்கள் இயக்கம் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.அதாவது எந்தக்கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதேசமயம் இளையதளபதிவிஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய்யின் பெயரையோ கொடியையோ பயன்படுத்தக்கூடாது.
இந்த நிலைப்பாட்டை நான் மக்கள்இயக்கத் தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்புகொண்டும் சமுகவலைதளங்கள் மூலமாகவும் தெளிவுபடக் கூறியிருக்கிறேன். மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதிவிஜய் மக்கள்இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன, அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதைத் தெளிவுபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் தங்கள் விருப்பம் போல் தாங்கள் விரும்புகிற கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இளையதளபதி மக்கள்இயக்கத்தின் பெயரையோ கொடியையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அகிலஇந்தியவிஜய் மக்கள் இயக்கப்பொறுப்பாளர் என்.ஆனந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம்.... தேவ் ஆனந்த் லுக்கில் கணேஷ் வெங்கட்ராமன்

த்ரிஷா நடித்து வரும் நாயகி மையப்படம், நாயகி. தமிழ், தெலுங்கில் தயாராகிவரும் இந்த ஹாரர் காமெடியில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

படத்தின் கதை எழுபதுகளில் நடக்கிறது.

கதையின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம் பேண்ட் என்று எழுபதுகளின் நாயகனாகவே மாறியுள்ளார் கணேஷ். தேவ் ஆனந்த் மற்றும் எல்விஸ் ப்ரெஸ்லியின் தோற்றத்தை மாதிரியாக வைத்து இவருக்கு மேக்கப் மட்டும் காஸ்ட்யூம் தயார் செய்திருக்கிறார்கள்.
 
கணேஷ் வெங்கட்ராமனின் முதல் படம், அபியும் நானும். அதில் த்ரிஷா நாயகி. அதன் பிறகு இப்போது - நாயகி திரைப்படத்தில்தான் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

 

‘24’ பட இயக்குநர் கதை சொன்னவுடன் சூர்யாவுக்கு போன் செய்தேன்: ஒளிப்பதிவாளர் திரு பேட்டி

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள படம், 24. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு, பி.சி.ஸ்ரீராமின் சீடர். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அவர் 24 படம் பற்றி கூறியதாவது:
சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் 24 படம் இவ்வளவு சுலபமாக முடிவடைந்திருக்காது. தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்புக் குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒருங்கிணைத்துத் தந்தார். மிகவும் ஊக்கப்படுத்தினார்.

எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொள்பவர்கள்தான். என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல். தனது ஆர்வத்தை செயலிலும் காண்பிப்பார்.
இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதேசமயம் இது பெரிய சவாலாகவும் உள்ளது. ஆனால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்விதமாக கதைகள் அமைவதில்லை. ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது 24 படக் கதைக்களம்.
ஆறு ஆண்டு காலமாக ஏன் தமிழில் படங்கள் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஹிந்தியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால் நேரமின்மை என்பது ஒரு காரணம், மேலும் ஒரு நல்ல படத்துக்காகவும் காத்திருந்தேன். அந்த ஏக்கம் 24 படத்தில் நிறைவேறியுள்ளது.
இதற்கு முன் விக்ரம் குமார், அவர் படங்களுக்கு என்னை அழைத்தபோதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. விக்ரம் குமார் என்னிடம் இந்தக் கதையைச் சொல்லும்போது அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவர் கதை சொல்லி முடித்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் போனில் டயல் செய்துகொண்டிருந்தேன்.
என்னடா, பதில் எதுவும் சொல்லாமல் செல்போனில் பேச முயற்சி செய்கிறாரே என அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு. கதையைக் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தைச் செய்கிறேன் என்று விக்ரம் குமார் முன்னிலையில் சூர்யாவிடம் சொன்னேன். நிறைய புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளேன். மனநிறைவு தந்த படம் இது என்றார்.

ஜங்கிள் புக் இரண்டாம் பாகம் - சுறுசுறுப்பு காட்டும் டிஸ்னி

டிஸ்னி தயாரித்துள்ள த ஜங்கிள் புக் சென்ற வாரம் இந்தியா உள்பட சில நாடுகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் ஓபனிங் வீக் என்டில் 7.6 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது.

ஆஸ்ட்ரேலியா 2.6 மில்லியன் டாலர்கள். இதேபோல் சில நாடுகளின் வசூலே 28.9 மில்லியன் டாலர்கள். வரும் வெள்ளிக்கிழமைதான் படம் யுஎஸ், சைனா, மெக்சிகோ போன்ற நாடுகளில் வெளியாகிறது.
 

இந்தியாவிலேயே பெரும் வரவேற்பை பெற்ற படம் யுஎஸ்ஸில் அள்ளி குவிக்கும் என்பதில் டிஸ்னிக்கு சந்தேகம் இல்லை. அதனால் இப்போதே இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஜஸ்டின் மார்க்கை இரண்டாம் பாகத்துக்கு திரைக்கதை எழுத பணித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய Jon Favreau இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
 
பிற விவரங்களை டிஸ்னி விரைவில் அறிவிக்க உள்ளது.

நடிகர் சங்கம் செய்தது சரியா?

அரசியல் அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது, தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம் இழுக்கின்றன.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி மறுபுறம்.நிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.



நடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
நீதிமன்ற உத்தரவு காரணமாக சங்கத்தின் உறுப்பினர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, தொழில்முறையற்ற ஆயுள்கால உறுப்பினர் என குறிப்பிடப்பட்டு, சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்கிறார்.
அரசியலில் நுழைந்த உடனேயே சினிமாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர் ஜெயலலிதா. கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இல்லாத போதும் கதை, திரைக்கதை, வசனம் என்று தள்ளாத வயதிலும் பங்களிப்பு செலுத்தி வந்திருக்கிறார். அவை குறிப்பிடத்தகுந்தவையா தரமானவையா என்பது வேறு விஷயம். ஆனால், தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரை தகுதி நீக்கம் செய்து, பங்களிப்பே செய்யாத ஒருவரை இன்னும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்வது வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கை மற்றும் திமுக காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.


பாக்சராக தோன்றும் பரத்

தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். 
 

விஜய் மில்டன் இயக்கிவரும் இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'இது சரியில்லை’ - தேசிய விருது விழாவை புறக்கணித்தது குறித்து இளையராஜா விளக்கம்

சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

   நியூ டெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
 
விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர் அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றுகொண்டார்.
 
சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர்.
 
தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.
 
இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள இளையராஜா, ‘’2010 வரை சிறந்த இசையமைப்புக்காக ஒரேயொரு தேசியவிருது வழங்கப்பட்டுவந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ண வீணா என மூன்று படங்களுக்கு நான் தேசிய விருது பெற்றுள்ளேன்.
 
ஆனால் இம்முறை சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும். எனது இசையில் ஒரு பாதி மட்டுமே சிறப்பாக உள்ளது எனச்சொல்வதாகும்’’ என்று கூறியுள்ளார்.
 
மேலும், இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விருந்து வழங்கும் விழாவில் கலந்துகொல்லாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
 
ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010ம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.
 
பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா? பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா

சுற்றுப்பயணம் செய்வதற்காக ஆஸ்திரியா சென்ற  தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை வித்யுலேகா அங்கே தனது பஸ்போர்ட்டை இழந்து தவிக்கிறார்.

நடிகை வித்யுலேகா தனது நண்பர்களுடன் ஆஸ்திரியாவிற்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார். வியன்னா நகரில் ஒரு ஹோட்டலில் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போது அவரது லாபியில் இருந்த இவருடைய கைப்பையை யாரோ திருடி விட்டனர். 
 
அதில் பாஸ்போர்ட், கிரெடிக், டெபிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று திகைத்த வித்யுலேகா,  ஆஸ்திரியா போலீசாரிடமும் புகார் கொடுத்துள்ளார். இந்திய தூதரகம் சென்று உதவி கேட்கவும் முடிவெடுத்துள்ளார்.
 
மேலும், டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். 
 
ஏனெனில், பாஸ்போர்ட் இல்லாமல் அவர் இந்தியா திரும்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


விக்ரம் வேதா என்னவானது....?

இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரும்ப வந்த மாதவன் பல கதைகள் கேட்டு ஒப்புக் கொண்ட ஒரே படம், விக்ரம் வேதா. 

ஓரம்போ, வ - குவாட்டர் கட்டிங் படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதி இயக்கும் படம். இதில் மாதவனுடன் விஜய் சேதுபதியும் நடிப்பதாக கூறப்பட்டது.
 
விக்ரம் வேதா படத்தின் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெறுவதாகவும், இப்போதைக்கு படம் குறித்து எதுவும் கூற முடியாது எனவும் காயத்ரி தெரிவித்திருந்தார். ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் குறித்து அதன் பிறகு தகவல் இல்லை. படம் ட்ராப் ஆனதாகவும் கிசுகிசு பரவி வருகிறது.
 

புஷ்கர் - காயத்ரியே படம் குறித்து விளக்கி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.
Madavan & Vijay Sethupathy