நீட் தேர்வு முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகம் பின்தங்கியது, மாணவர்களின் குற்றம் அல்ல. அரசின் குற்றம். நீட் தேர்வு முடிவு நமக்கு பாடம் அளித்துள்ளது. முதலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். கல்வி துறையில் செய்யப்படும் மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் மாயம்

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியாகியுள்ளன.
அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷின்மோ என்ற கிராமத்தை சேர்ந்த 40 வீடுகளும் புதைந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத்திய - அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயலலிதா ஆசியுடன் எனது தலைமையிலான ஆட்சி தொடரும்- ஓபிஎஸ் - Instant Portal

எதிர்க் கட்சி, மாற்றுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எனது ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் எனது தலைமையில் ஆட்சி நீடிக்கிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் தனது தலைமையிலான ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் நல்லாட்சி தொடர எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். கடந்த ஒருவார காலமாக அதிமுகவில் அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவார காலமாக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். 8 எம்எல்ஏக்கள், 11 எம்.பிக்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. தீர்ப்புக்குப் பிறகு பிரிந்து போன எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது என்பது இன்று உறுதியாகியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து எம்எல்ஏக்களும் கசப்புகளை மறைந்து ஒன்றாக இணைய வேண்டும் என்றும், கடந்த ஒருவாரகாலமாக தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் அவர், எதிர்கட்சியினர், மாற்றுக்கட்சியினர் ஆதரவு இன்று ஆட்சியை தொடருவேன் என்றும், தனது தலைமையிலான ஆட்சி ஜெயலலிதாவின் ஆசியுடன் தொடரும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் ஆசி நமக்கு உள்ளதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் நீக்கம்- சசிகலா அதிரடி அறிவிப்பு - Instant Portal

சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கலகக் குரலுக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலர் பொன்னையன் உள்ளிட்டோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.