சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கலகக் குரலுக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலர் பொன்னையன் உள்ளிட்டோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.