தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி பட்டுவாடா: ஈஸ்வரன் திடுக் தகவல்

கரூர்: தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிந்தும் தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்துள்ளது. தேர்தலை தள்ளி வைப்பதுதான் இதற்கு தீர்வா? தேர்தல் தள்ளிவைப்பு என்பது பணப்பட்டுவாடாவிற்கு மேலும் வழி வகுக்கும். நாளை தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சியும் அமைந்து விட்டால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் இடைத்தேர்தல் போல் நடக்கும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு அமைச்சர் உட்கார்ந்து கொண்டு தேர்தல் பணியாற்றுவார்கள். எனவே இந்த தேர்தலை தள்ளி வைத்திருக்கக்கூடாது. தள்ளி வைப்பது நேர்மையாகி விடாது. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் கொடுக்கப்பட்ட பணம் பாவப்பட்ட பணம். அதை வாங்கி கொண்டு ஓட்டு போடுவது பாவத்தில் பங்கு கொள்வதற்கு சமம். தமிழகம் முழுவதும் ரூ.6ஆயிரம் கோடி வரை ஓட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. தேர்தல் கமிஷன் தி.மு.க- அ.தி.மு.க.விற்கு துணை போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. அய்யம்பாளையம் அன்புநாதன் பிரச்சனையில் விசாரணை முடிவு இன்னும் வெளிவரவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

‘அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம், தோல் பாதிக்கும்; சன்ஸ்க்ரீன்கள் பயனளிக்காது’

‘‘ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், தோல் பாதிக்கும்’’ என்று தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பின்னர், செல்பி மோகம் அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும்செ ல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் தலைவிரித்தாடுகிறது.

மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் செல்பி எடுப்பதால், அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் முகத்தில் விரைவிலேயே சுருக்கம் வரும், வயதான தோற்றம் ஏற்படும், தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


செல்பி எடுக்கும் போது, எந்த கையால் போனை பிடித்து கொண்டு படம் எடுக்கிறீர்கள் என்பதை, உங்கள் முகத்தை பார்த்தே மருத்துவர்களால் கூறமுடியும் என்கின்றனர். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்து கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்தின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவ இயக்குநர் சைமன் ஜோவாகி கூறும்போது, ‘‘அதிகமாக செல்வி எடுப்பவர்களும், பிளாக்கில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டும். ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல ஒளி கூட நமது தோலை பாதிக்கும்’’ என்கிறார்.


‘‘மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (டிஎன்ஏ) அழித்து விடும். அதனால் தோல் விரைவில் வயதான தோற்றம் பெற்றுவிடும். சுருக்கங்கள் அதிகரித்து விடும்’’ என்று நிபுணர்கள் கூறுவதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ‘ஒபாகி ஸ்கின் ஹெல்த் இன்ஸ்டிடியூட்’ நிறுவனர் ஜியின் ஒபாகி கூறும்போது, ‘‘நிறைய செல்பி எடுப்பவர்களின் முகத் திசுக்கள் ஒரு பக்கம் மாசடைந்திருக்கும். முகத்தின் ஒரு பக்கத்தில் உங்களால் அதை பார்க்க முடியாது. இதை தடுக்க வேண்டியது அவசியம். தோலில் உள்ள தாதுக்களை காந்த அலைகள் மாற்றி விடுகின்றன. ‘சன்ஸ்கிரீன்’ போன்ற சாதனங்கள் எல்லாம் உங்களை பாதுகாக்காது’’ என்று எச்சரித்துள்ளார்.




பிஎஸ்எல்வி சி34… ஒரே அடியில் 20 “சாட்டிலைட்ஸ்”.. அடுத்த சாதனைக்கான கவுண்ட் டவுன்.. ஸ்டார்ட்ஸ்!


ஸ்ரீஹரிகோட்டா: ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோளைகளை ஏந்திச் செல்ல இருக்கும் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 34 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 48 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை ஏந்தி, விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ சாதனை புரிந்திருந்தது. இந்நிலையில் தற்போது தனது சாதனையை தானே முறியடிக்கும் வகையில், 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டை விண்ணில் ஏவ இருக்கிறது.


வரும் 22ம் தேதி காலை 9.25 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டைச் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 19 செயற்கைக்கோள்கள் 560 கிலோ எடை கொண்டவை. இந்த 20 செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டின் எடை 1,288 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீட்டர் தொலைவில் சூரியனுடன் ஒத்தியங்கும் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதன் மூலம் புதிய சாதனை படைக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில், பிஎஸ்எல்வி சி34 டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள்!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 15 அன்று படம் வெளியாகிறது.
மாணவி ஜிஷாவை அசாம் வாலிபர் கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

மாணவி ஜிஷாவை அசாம் வாலிபர் கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்


பெரும்பாவூர்,

சட்ட மாணவி ஜிஷா கொலை வழக்கில் காஞ்சீபுரத்தில் அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிஷா படுகொலை 

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(வயது 30). தலித் இனத்தை சேர்ந்த சட்ட மாணவி. கடந்த ஏப்ரல் மாதம் 28–ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது கற்பழிக்கப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அம்ரூல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர் 

இதை தொடர்ந்து கைதான அசாம் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வருவது அறிந்து பெரும்பாவூர் கோர்ட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவரை பொதுமக்கள் தாக்கி விடக்கூடாது என்பதற்காக கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைதான அம்ரூல் இஸ்லாமை புலனாய்வு போலீசார் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். அப்போது கறுப்பு துணியால் கட்டப்பட்ட அவர் முகத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்து இருந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது போலீசார் அவரது ஹெல்மெட்டை அகற்றினார்கள். பின்னர் நீதிபதி முன் நிறுத்திய போது கறுப்பு துணியை அகற்றினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சு, குற்றம் சாட்டப்பட்ட நபரை நோக்கி போலீசார் அடித்து துன்புறுத்தினார்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதன்பிறகு இந்த வழக்கில் வாதாட சட்ட உதவி தேவையா? என்றதற்கு அவர் ஆமாம் என்று பதில் அளித்தார்.

15 நாள் காவலில் வைக்க உத்தரவு 

இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கை வாதாடுவதற்கு வக்கீல் பி.ராஜனை நீதிபதி நியமித்தார். போலீசார் தரப்பில் அப்துல்ஜலீல் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அம்ரூல் இஸ்லாமை பலத்த பாதுகாப்புடன் போலீசார் காக்கநாட்டில் உள்ள மத்திய கிளை சிறையில் அடைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

மாணவி ஜிஷாவை அசாம் வாலிபர் கொலை செய்தது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சட்ட மாணவி ஜிஷா கொலை வழக்கில் காஞ்சீபுரத்தில் அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சட்ட மாணவி ஜிஷா வீட்டின் அருகே ஒரு கட்டிடம் கட்டும் பணி நடந்தது. அங்கு அமீருல் இஸ்லாம் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் குடிபோதையில் அமீருல் இஸ்லாம் சட்ட மாணவி ஜிஷா வீட்டு அருகே உள்ள குளியல் அறையில் ஒரு பெண் குளிப்பதை பார்த்து உள்ளார். அதற்கு அந்த பெண் அமீருல் இஸ்லாமை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், செருப்பால் தாக்கியதாக தெரிகிறது. அதை வேடிக்கை பார்த்த ஜிஷா, அமீருல் இஸ்லாமை பார்த்து கேலி செய்து சிரித்து உள்ளார். இதனால் மனதில் வஞ்சகம் கொண்ட அவர் சம்பவத்தன்று குடிபோதையில் பஸ்சை விட்டு தனியாக வந்த அவரை வஞ்சகம் தீர்த்து கொள்ள திட்டம் வகுத்தார். அதன்படி பின் தொடர்ந்து வந்த அவர் வீட்டுக்குள் வந்ததும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி உள்ளார். கொலையாளி விட்டு சென்ற செருப்பை வைத்து துப்பு துலக்கி அவரை கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆகாயத்தை அதிர வைத்த ‘நெருப்புடா’ பாடல் : தரையிறங்கிய துபாய் விமானம்

சென்னையிலிருந்து துபாய் சென்ற விமானம், கபாலி திரைப்படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடலால தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த 14ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 07.00 மணிக்கு, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா இந்தியாவின் AI 0905 என்ற விமானம் துபாய் புறப்பட்டு சென்றுள்ளது.
விமான நேர அட்டவணைப்படி விமானம் இரவு 10.00 மணிக்கு துபாய் மணிக்கு சென்றடைய வேண்டும். ஆனால், துபாய் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.
காரணம் குறித்து விளக்கம் அளித்த விசாரணை அதிகாரி, “விமானத்தில் நெருப்புக்கான சமிக்ஞையோ, புகையோ வெளியாகவில்லை. பயணிகளில் ஒருவர் ‘நெருப்பு, நெருப்பு’ என தமிழில் கத்தியதால், அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண் விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் சிரித்துக்கொண்டு கூறுகையில், ”சென்னையை சேர்ந்த 30 வயதுடைய என்ஜினியர் ஒருவர், கபாலி திரைபடத்தில் வரும் ’நெருப்புடா’ பாடலை பாடியுள்ளார். அவர் காதில் ஹெட்போனை அணிந்துகொண்டு அவரது உச்சக்குரலில் பாடியுள்ளார்.
ஒருசில தமிழ் வார்த்தைகள் மட்டுமே தெரிந்த அந்த பணிப்பென், குறிப்பாக அவசர காலத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தெரிந்து வைத்துள்ள அந்த பெண் ‘நெருப்பு’ என்ற வார்த்தையை கேட்டதும் விமான ஓட்டுநருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்தே விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.