நாளை மறுநாள் திரைக்கு வரஇருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.
இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான். விமானம் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை, பத்திரிகைகள் , டி.வி, இணையதளம், செல்போன் அனைத்திலும் கபாலி மயமாகவே உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ‘கபாலி’ என்ற பெயரை கேட்டாலே குதூகலப்படும் அளவுக்கு இதன் தாக்கம் எங்கும் நிறைந்திருக்கிறது.
இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் தேதி தான் திரைக்கு வருகிறது.
ஆனால் ‘கபாலி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் திரையிடப்படுகிறது. சீன மொழியிலும் வெளியிட இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி’ 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.‘பாகுபலி’ படத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நடிகர்&நடிகைகள் சென்று ‘பாகுபலி’ யை பிரபலப்படுத்தினார்கள். ஆனால் ‘கபாலி’ படத்துக்காக இந்தியாவில் முதல் முறையாக விமானத்தில் ‘கபாலி’ போஸ்டர் இடம் பெற்றது. ஏர்& ஏசியா விமான நிறுவனம் பல்வேறு சலுகைகளையும்அறிவித்துள்ளது.
இது தவிர தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு, தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகளை அறிவித்து ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்துவதுடன் தங்களுக்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது எப்போதும், எந்த படத்துக்கும் இல்லாத புதிய யுத்தியாகும்.‘கபாலி’ திரைக்கு வரும் தினத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும், திரை உலகினரும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்திபடங்கள்தான் என்ற நிலை இருந்தது. அதை ‘பாகுபலி’ ஓரளவு முறியடித்தது. இப்போது ரஜினியின்’கபாலி’ படத்தின் மூலம் இந்திய படங்கள் என்றாலே அது தமிழ்படம் தான் என்று வெளிநாட்டினர் கருதும் அளவுக்கு ‘கபாலி’ புகழ் கொடிகட்டி பறக்கிறது. திரைக்கு வந்த பிறகு மேலும் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.