காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை பரவியதை அடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.