இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரும்ப வந்த மாதவன் பல கதைகள் கேட்டு ஒப்புக் கொண்ட ஒரே படம், விக்ரம் வேதா.
ஓரம்போ, வ - குவாட்டர் கட்டிங் படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதி இயக்கும் படம். இதில் மாதவனுடன் விஜய் சேதுபதியும் நடிப்பதாக கூறப்பட்டது.
விக்ரம் வேதா படத்தின் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெறுவதாகவும், இப்போதைக்கு படம் குறித்து எதுவும் கூற முடியாது எனவும் காயத்ரி தெரிவித்திருந்தார். ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் குறித்து அதன் பிறகு தகவல் இல்லை. படம் ட்ராப் ஆனதாகவும் கிசுகிசு பரவி வருகிறது.
புஷ்கர் - காயத்ரியே படம் குறித்து விளக்கி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.
Madavan & Vijay Sethupathy |