த்ரிஷா நடித்து வரும் நாயகி மையப்படம், நாயகி. தமிழ், தெலுங்கில் தயாராகிவரும் இந்த ஹாரர் காமெடியில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதை எழுபதுகளில் நடக்கிறது.
படத்தின் கதை எழுபதுகளில் நடக்கிறது.
கதையின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம் பேண்ட் என்று எழுபதுகளின் நாயகனாகவே மாறியுள்ளார் கணேஷ். தேவ் ஆனந்த் மற்றும் எல்விஸ் ப்ரெஸ்லியின் தோற்றத்தை மாதிரியாக வைத்து இவருக்கு மேக்கப் மட்டும் காஸ்ட்யூம் தயார் செய்திருக்கிறார்கள்.
கணேஷ் வெங்கட்ராமனின் முதல் படம், அபியும் நானும். அதில் த்ரிஷா நாயகி. அதன் பிறகு இப்போது - நாயகி திரைப்படத்தில்தான் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.