எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை- விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் திமுவுக்கு ஆதரவ தெரிவித்துவருவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதை மறுக்கும் வகையில் விஜய்மக்கள்இயக்கம் சார்பாக அறிக்கை யொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், வருகிற 2016 சட்டமன்றத்தேர்தலில் இளையதளபதிவிஜய் மக்கள் இயக்கம் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.அதாவது எந்தக்கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதேசமயம் இளையதளபதிவிஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய்யின் பெயரையோ கொடியையோ பயன்படுத்தக்கூடாது.
இந்த நிலைப்பாட்டை நான் மக்கள்இயக்கத் தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்புகொண்டும் சமுகவலைதளங்கள் மூலமாகவும் தெளிவுபடக் கூறியிருக்கிறேன். மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதிவிஜய் மக்கள்இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன, அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதைத் தெளிவுபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் தங்கள் விருப்பம் போல் தாங்கள் விரும்புகிற கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இளையதளபதி மக்கள்இயக்கத்தின் பெயரையோ கொடியையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அகிலஇந்தியவிஜய் மக்கள் இயக்கப்பொறுப்பாளர் என்.ஆனந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this

Related Posts