சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை, முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு.பட்டினப்பாக்கத்தில் ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19), சினேகா (16) என்று மூன்று மகள்கள். முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பவித்ரா, பரிமளா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சினேகா பிளஸ்2 படித்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று வந்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது.இந்நிலையில் இன்று (வெள்ளி) காலை அவர்கள் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ராயபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பெண்களும் நிர்வாண நிலையில் ஆளுக்கொரு மூலையில் கிடந்துள்ளனர். இவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. தலைமறைவாக இருந்த சின்னராசுவை போலீஸார் அவரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரையும் சின்னராசு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த கொலை நடந்துள்ளதாகவும், எங்களது கவனத்தை திசைத் திருப்பவே 4 பேரையும் நிர்வாணமாக்கியுள்ளார் சின்னராசு என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மனைவி, மகள்கள் நிர்வாண நிலையில் இருப்பதால் சின்னராசு சைக்கோவாக இருக்கலாமா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.