ராஜஸ்தான் மாவட்டம் உதய்ப்பூரில் அங்குள்ள ஒரு சமூகத்தில் உள்ள ஒரு இளம் பெண் கட்டுப்பாட்டை மீறி திருமணமான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அந்த் பெண் தன் காதலனுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார். பெண்ணின் வீட்டிற்கு சென்ற அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள இதனையடுத்து அப்பெண்ணின் கணவர், அந்த பெண்ணையும், அடித்து உதைத்து உள்ளனர்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்த அவர்கள் அந்த பெண்ணையும் அவரது காதலரையும் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாட்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர்.
அப்பெண்ணின் கணவர் நிர்வாணப்படுத்தப்பட்ட இருவரின் புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அந்த பெண்ணின் காதலர் குடும்பத்தினர் 80,000 ரூபாயை செலுத்தி தங்கள் மகனை அழைத்துச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.